Advertisment

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை: ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

வருகிற திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramanathapuram dist local holiday one day school and college PRESS RELEASE in tamil

திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறையை நாளை ஈடு செய்யும் விதமாக 22.07.2023 அன்று 4வது சனிக்கிழமை வேலை நாளாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

ச. மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்

Advertisment

Ramanathapuram News in Tamil: ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் (17.07.2023) அன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டினம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் அதிகம் செல்ல உள்ளதால் போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி 17.07.2023 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் மேற்படி விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக 22.07.2023 அன்று நான்காவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தும் இதன்மூலம் உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment