ச. மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் எஸ். ஹேமலதா வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு:
வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம்1972- ன்படி பச்சைக் கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக் கிளி, நீல பைங்கிளி, மரகத புறா, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, பனங்காடை, கௌதாரி, மற்றும் வன உயிரினங்கள் வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய
குற்றமாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில்; பாதுகாக்கப்பட்ட வன உயிரினம் பச்சைக் கிளி வீடுகளில் வளர்ப்பது பரவலாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில்; வன உயிரினங்களை வளர்க்க கூடாது.
இதுநாள் வரையிலும் அவ்வாறு வளர்ப்பில் இருக்கும் எனில் வரும் ஜீன் 30ம் தேதிக்குள் கீழ்காணும் வனப்பணியாளர்களளை தொடர்பு கொண்டு தங்கள் அருகில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வன உயிரினங்களை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
- ராமநாதபுரம் வனச்சரகம்
9786431805 - 7973808328
- சாயல்குடி வனச்சரகம்
8489534543 - 8973624134
- பரமக்குடி வனச்சரகம்
9500692311 - 9976969370
- ஆர்.எஸ்.மங்கலம் வனச்சரகம்
9944802255 - 7639886483
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil