Advertisment

ராமநாதபுரம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... வருகிற 15ம் தேதி முதல் அமலாகிறது மீன்பிடி தடை காலம்!

மீன்களின் இன்பெருக்க காலத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் வரும் வரும் 15ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramanathapuram: Fish Ban Period 2023 Press Release in tamil

Ramanathapuram (Express Photo: S. Martin Jeyaraj)

ச. மார்ட்டின் ஜெயராஜ் - ராமநாதபுரம் மாவட்டம்

Advertisment

Ramanathapuram: Fish Ban Period 2023 Press Release in tamil: கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தாண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வரும் 15ம் தேதி துவங்கி, ஜூன் 14ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (இரு நாட்களும் உட்பட) 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றம் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

publive-image

Ramanathapuram: Annual fishing ban period To begin from April 15th; Collector Johny Tom Varghese Press Release (Express Photo: S. Martin Jeyaraj)

அதனைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (இரு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப் படகு மீனவர்கள் மேற்படி மீன்பிடி கலன்களை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (இரு நாட்களும் உட்பட) 61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்மென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Ramanathapuram Fishermen Fishing
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment