பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிட்டார். தரவரிசை பட்டியலை tnea.ac.in.annauiv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் சிலர் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது. எனவே, நீட் தேர்வு முடிவு வெளியான பின்பே கலந்தாய்வு தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “59 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதேபோல், 811 மாணவர்கள் 200க்கு 199 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர். 2,097 பேர் 200க்கு 198 கட் ஆப் மதிப்பெண்ணும், 3,766 பேர் 200க்கு 197 கட் ஆப் மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close