சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சுரங்க பகுதி கட்டுமானப் பணி ஒன்பது மாதங்களுக்கு தாமதிக்கப்படலாம் என்று சி.எம்.ஆர்.எல். தெரிவிக்கிறது. இதற்கு காரணம், டெண்டர் நடைமுறையில் தாமதம் ஏற்படுவது தான் என்று கூறுகிறார்கள்.
மெட்ரோவின் சுரங்கப் பிரிவின் கட்டுமானப் பணிக்கான காலக்கெடு டிசம்பர் 2025 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் திட்டமானது, 118.9 கி.மீ. தூரத்திற்கு 128 மெட்ரோ நிலையங்களுடன் உள்ளடக்கியது, இதில் 48 நிலையங்களுக்கு 43 கி.மீ. தூரத்திற்கு சுரங்க வசதியும் அடங்கும்.
ஒரு சில சுரங்கப் பிரிவுகளை கட்டுவதற்கும், வேறுசில நிலத்தடி நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் டெண்டர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தனர்.ஆனால், அவர்களின் ஒப்பந்தமும் 2021 டிசம்பரில் ரத்து செய்யப்பட்டன, அவர்களின் ஒப்பந்தம் இன்று வரை மறுபரிசீலனை செய்யப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5.6 கி.மீ.க்கு மெட்ரோவின் சுரங்கப் பகுதியை அமைப்பதற்கு ஏற்றவாறு டெண்டர் அமையாததால் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், JICA (Japan International Cooperation Agency) நிபந்தனைகள் காரணமாக, கொளத்தூர் - நாதமுனி மெட்ரோ கட்டுமானத்திற்கு மோசமான வரவேற்பு கிடைத்தது. மெட்ரோவின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடம் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவர்களிடம் அனுமதி பெற்று செயல்பட தாமதம் ஆகிறது. சென்னை மெட்ரோவின் நிலத்தடி பகுதி கட்டுமானத்திற்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரை தாமதிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் அடங்குகின்ற 52 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் மாதவரம் - சோழிங்கநல்லூர் (தாழ்வாரம் 3) மற்றும் மாதவரம் - கோயம்பேடு (தாழ்வாரம் 5) ஆகிய கட்டுமானத்திற்கு, JICA நிறுவனம் நிதி அளித்துள்ளது.
மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை உயர்த்தப்பட்ட தாழ்வாரத்திற்கான கட்டுமானப் பணியின் ஆரம்ப காலக்கெடு ஜூன் 2025 ஆக இருந்தது. தற்போது அதிலிருந்து நான்கு அல்லது ஐந்து மாதங்கள் தாமதிக்கப்படலாம் என அதிகாரி கூறுகிறார்.
கொளத்தூர் - நாதமுனி மெட்ரோ கட்டுமானத்தைத் தவிர, CMRL மற்ற ஐந்து டெண்டர் ஒப்பந்தங்களை 2021 டிசம்பரில் ரத்து செய்துள்ளது. அவை, மாதவரம் - பெரம்பூர், அயனாவரம் - கெல்லிஸ், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை - அடையாறு ஜங்ஷன், அடையாறு முனையம் - தரமணி இணைப்புச் சாலை ஆகிய திட்டங்கள் ஆகும். இத்திட்டங்களுக்கான டெண்டர்கள் இன்று வரை உறுதி செய்யப்படவில்லை.
தற்போது, மாதவரத்தில் இருந்து கெல்லிஸ் மற்றும் கெல்லிஸ் முதல் தரமணி சாலை சந்திப்பு வரை இரட்டை சுரங்கப்பாதை அமைக்க இரண்டு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் மாதவரத்தில் இரண்டு பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்று CMRL தெரிவித்துள்ளது.
முதல் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் ஏற்கனவே வந்துவிட்டது, இரண்டாம் இயந்திரம் தொழிற்சாலை உட்படுத்தும் சோதனைகளுக்கு பின்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil