மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு... தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது ஆந்திரா மற்றும் ஒரிசாவை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகரும். இதன்காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழையாகவும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close