/indian-express-tamil/media/media_files/2025/09/24/g1lr1whxoaasamt-2025-09-24-10-23-40.jpg)
Thoothukudi
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட், தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் தொழிற்பேட்டையில் ரூ.1,156 கோடி பிரம்மாண்ட முதலீட்டில் ஒருங்கிணைந்த உணவுப் பொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
60 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அதிநவீனத் தொழிற்சாலை, பல்வேறு உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் மையமாகச் செயல்படும். பிராந்திய தின்பண்டங்கள் முதல் சுவையான பிஸ்கட்டுகள், நறுமணமிக்க மசாலாப் பொருட்கள் முதல் ஆரோக்கியமான ஆட்டா (கோதுமை மாவு), சமையல் எண்ணெய் எனப் பலதரப்பட்ட நுகர்வோர் பொருட்களை இங்கு உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய ஆலையால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2,000 உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து தன் X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான "திராவிட மாடல்" அரசு, மாநிலத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இது தமிழ்நாட்டை ஒரு முன்னணி தொழில் மையமாக நிலைநிறுத்துகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீடு, தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) சந்தையில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
FLASH🚨
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 24, 2025
Another FMCG major chooses Tamil Nadu !
Reliance Consumer Products Limited has chosen Tamil Nadu for its next big unit. The company will invest Rs. 1,156 crore to set up an integrated manufacturing facility at SIPCOT Allikulam Industrial Park ! #ThoothukudiRising
This… pic.twitter.com/xajLVZ41md
தமிழ்நாட்டில், குறிப்பாக தூத்துக்குடியில் இத்தகைய ஒரு பெரிய தொழிற்சாலை அமையவிருப்பது அப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.