டெல்டா விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு; முதல்வர் அறிவிப்பு

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இன்றும் மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் நலன் கருதி நிதி ஒடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, இந்தாண்டு குருவை தொகுப்பு திட்டம் ரூ.56.92 கோடியில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். பயறு வகை பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960 வீதம் வழங்கப்படும். மேலும், பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றிற்கு ரூ.1200 என 100% மானியம் வழங்கப்படும் என்றார்.

×Close
×Close