திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.3.65 கோடி மதிப்பிலான 10 வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம், 15-வது நிதிக்குழு நிதியின் கீழ் 4 மழை நீர் வடிகால் தூர் வாரும் வாகனங்கள், 5 சிறிய ரக புதை வடிகால் அடைப்பு நீக்கும் வாகனங்கள் என மொத்தம் ரூபாய் 3.65 கோடி மதிப்பிலான 10 வாகனங்களை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
Advertisment
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்த அதே தருணத்தில் திடீரென ஒரு வெடி சத்தம் அங்கிருந்தவர்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. சுதாரித்துக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அரசு அதிகாரிகள் அதுவென்ன சத்தம் எனப் பார்க்கும்போது, திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி 2ஜி அலை கற்றுக்கான வயர்லெஸ் டவர் முறிந்து சாலையின் நடுவே உள்ள மின் கம்பிகள் மீதும் அருகிலுள்ள ட்ரான்ஸ் பார்மர் மீதும் விழுந்தது.
உடனடியாக அமைச்சரின் பாதுகாப்பிற்காக வந்த காவலர்கள் சாலை நடுவே தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் அப்பகுதி வழியே செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியே வரும் பொதுமக்களை மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
130 அடி உயரம் உள்ள இந்த வயலர்ஸ் டவர் முறிந்து கீழே விழுந்தபோது, மின்மாற்றின் அருகில் இருந்த மின் கம்பிகளுக்கிடையே டவரின் உடைந்த பகுதிகள் சிக்கிக் கொண்டன. இதனால் ஒத்தக்கடை, கண்டோண்மெண்ட் பகுதியில் மின் இணைப்பு தடைபட்டது. உடைந்த டவரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியினிடையே நடைபெற்ற இந்த விபத்து சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர், மேயர், ஆட்சியர் என அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த நிலையில், பின்னர் சுதாரித்துக்கொண்டு தத்தம் பணிகளை மேற்கொண்டனர்.
இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வருகையும், மாநகராட்சி பணியாளர்கள் வருகையில் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
செய்முறை: க.சண்முகவடிவேல்
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news