குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலகம் மற்றும் பாரம்பரியமிக்க விக்டோரியா ஹால் மூவரண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்ந்தன.
குடியரசு தின விழா நாடு முழுவதும் விமர்சையாக இன்று அனுசரிக்கப்படுகிறது.விழாவை ஒட்டி நாடு முழுவதும் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கோவை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாமன்ற அலுவலகமான பாரம்பரிய விக்டோரியா ஹால் ஆகியவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மூவரண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மக்கள் மத்தியில் குடியரசு தின விழா உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று அலங்காரங்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி. ரஹ்மான்.கோவை