சரிவை நோக்கி தமிழக உற்பத்தித் துறை; ரிசர்வ் வங்கி அறிக்கை!

தமிழகத்தில் போதிய முதலீடுகளும், தொழில் துவக்குவதற்கான வரவேற்பும் இல்லாத காரணத்தால் தமிழக உற்பத்தித்துறை வளர்ச்சி, முன்னர் இருந்ததைவிடக் தற்போது குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, இந்த நிதியாண்டின் தமிழக உற்பத்தித்துறை வளர்ச்சி 1.65 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி நிலை கடந்த நிதியாண்டில் 7. 11% வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழலே இந்த உற்பத்தித்துறையின் சரிவுக்குக் காரணமென பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

×Close
×Close