scorecardresearch

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : 77.68 சதவிகித வாக்குகள் பதிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி 23.74 % வாக்குகள் பதிவாகியுள்ளது

Tamil Nadu assembly by-election liveமருது கணேஷ், தினகரன், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி,
Tamil Nadu assembly by-election live : சூலூரில் வாக்குபதிவு தாமதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: முதன்முறையாக வாக்களித்த இளம் தலைமுறையினர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: முதன்முறையாக வாக்களித்த இளம் தலைமுறையினர்

இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகிறார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு ‘வெப்’ கேமரா மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்கனவே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பில் இருக்கும் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம். வாக்களிக்க செல்லும்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையையோ அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஒன்றையோ எடுத்து சென்று வாக்களிக்கலாம்.

இரவு 8.00 : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 77.68 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

மாலை 5.00 : வாக்குப் பதிவு முடியும் நேரமான மாலை 5 மணி வரை 73.45 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் அதன்பிறகும் பல பூத்களில் கூட்டம் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. எனவே இரவு 7 மணி வரை சில பூத்களில் வாக்களித்தனர்.

மதியம் 03.00 – ஆர்.கே.நகரில் மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடிகளில் 184 சாவடிகளில் 3 மணி வரை 59.29% வாக்குகள் பதிவாகியுள்ளது. 1,35,319 வாக்காளர்கள் வாக்குபதிவு செய்துள்ளனர்

மதியம் 01.45  – ஆர்.கே. நகரில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.60% வாக்குகள் பதிவு.

காலை 11:00 – ஆர்.கே. நகரில் காலை 11 மணி நிலவரப்படி 23.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

காலை 09.50 – ஆர்.கே.நகரில் இன்று காலை பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் வந்துள்ளது என தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கார்த்திகேயன் கூறியுள்ளார். அதாவது, 20 ரூபாய் நோட்டை கொடுத்து சீரியல் எண்ணை போனில் தெரிவித்தால் 1 ஓட்டுக்கு  ரூ6,000 லஞ்சம் தரப்படுகிறதாம். (அம்மாடி!!)

காலை 09.30 – ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

காலை 09.20 – ஆர்.கே.நகரில் ஹவாலா பாணியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தினகரன் மீது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் பகீர் பேட்டி. 20 ரூபாய் நோட்டை கொடுத்து சீரியல் எண்ணை போனில் தெரிவித்தால் 1 ஓட்டுக்கு  ரூ6,000 லஞ்சம் என புகார் தெரிவித்துள்ளார்.

காலை 09.10 – ஆர்.கே. நகரில் காலை 9 மணி நிலவரப்படி 7.32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: கடமையை நிறைவேற்றிய மூதாட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: கடமையை நிறைவேற்றிய மூதாட்டி

காலை 08.45 – ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

காலை 08.20 – புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டார். அப்போது பேட்டியளித்த கமிஷ்னர், “தேர்தல் பாதுகாப்புடனும் அமைதியாகவும் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

காலை 08.10 – திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருது கணேஷ், “6000 அல்ல, 60,000 கொடுத்தாலும் ஆர்.கே.நகர் மக்கள் ஏமாற தயாராக இல்லை” என்றார்.

காலை 08.00 – பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rk nagar bypoll starts live updates

Best of Express