ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு : ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை ஆர் கே நகர் தொகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் இடைத்தேர்தல் நடைபெற்ற பொழுது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வைத்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு அளித்ததாக சோதனையில் ஆவணங்கள் சிக்கியது.
ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு தமிழக அரசின் விளக்கம்
இந்த ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்த காவல் துறைக்கு புகார் அளித்தது. அந்த புகாரின் படி காவல்துறை யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இதன் அடிப்படையில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் வைரக்கன்ணன் மனுதாக்கல் செய்தார். மேலும் பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று திமுக சார்பில் போட்டியிட்ட மருது கணேஷ் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பணப்பட்டுவடா புகார் தொடர்பாக இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
மேலும் படிக்க : மீண்டும் சூடு பிடிக்கும் ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம்
இதனிடையே 89 கோடி ரூபாய் பண பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் சென்னை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரானைக்கு வந்தது. 89 கோடி ரூபாய் ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை செய்துவிட்டதாகவும் இது புகார் தொடர்பாக நரசிம்மன் என்வர் வழக்கு தெடர்ந்த்தாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இணை ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அரசு எப்படி தெரிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் மதியம் 2.15 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணை பிற்பகல் தள்ளிவைத்தனர்.