சாலைவிபத்தில் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு 2-வது இடம்!

தமிழகத்தில் நாளொன்றுக்கு சாராசரியாக 2 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 6 மாதத்தில் சென்னையில் மட்டும் 3420 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 590 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் ஒரு நாளைக்கு சாராசரியாக 2 பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விபத்துக்கள் நிகழும் மாநிலங்களில் தமிழம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நாள்தோறும் சாலை விபத்துகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துவரும் நிலையில், இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close