Rs Bharathi | Lok Sabha Election | Dmk | சென்னை வாகன அணிவகுப்பில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என ஆர்.எஸ். பாரதி கேள்வியெழுப்பி உள்ளார்.
சென்னை மீஞ்சூரில் தி.மு.க பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, தேர்தல் விதிகளை மீறி நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?” எனக் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, “ஆளுநர் மாளிகையில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், “இதுவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரைக்கு செல்லும் வழியில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினால் என்னென்ன சொல்லியிருப்பார்கள்? எனவும் கேள்வியெழுப்பினார்.
பிரதமர் மோடி கலந்துகொண்ட ரோடு ஷோ சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிலையில் ஆர்.எஸ் பாரதி இவ்வாறு கேள்வியெழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“