Advertisment

கோவையில் திமுக அரசை கண்டித்து டிச.2 உண்ணாவிரத போராட்டம்.. எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.பி., வேலுமணி கேட்டுக்கொண்டார்.

author-image
WebDesk
New Update
S P Velumani says hunger strike will be held on December 2 to condemn the DMK government

கோவையில் திமுக அரசை கண்டித்து டிச.2 உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைக்கிறார். கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதிமுக திட்டங்கள் செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ஒன்றரை ஆண்டுகளில் கோவைக்கு முதலமைச்சர் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. கேட்ட திட்டங்களை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார்.

அத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை. பத்து ஆண்டுகளில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தந்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

பல மேம்பாலங்கள் கட்டினோம். கோவைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஒன்றரை ஆண்டுகளில் எதாவது செய்துள்ளார்களா என்ற கேள்வியை எழுப்பினார்.

மேலும் கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காதீர்கள். கொசு மருந்து அடிக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை. வரி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

மக்களுக்காக தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார். உளவுத்துறை செயல்படவில்லை. காவல்துறை செயலிழந்து விட்டது.

ஆளுநர் எந்த கட்சியையும் சாராதவர் எனவும் முதலமைச்சர் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment