தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
போலி மதுபானம் பிரச்னைகளை தவிர இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசு, தற்போது புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதைப்பற்றி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
"டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் தொகையை, இரவு நேரங்களில் ஊழியர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
இதைத் தடுக்க வங்கி அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். வங்கி அதிகாரிகள் நேரடியாக கடைக்குச் சென்று பணத்தைப் பெறும் வகையிலோ, வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கடையாக சேகரிக்கும் வகையிலோ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
தற்போது, கண்ணாடி பாட்டில்களுக்குப் பதிலாக காகிதக் குடுவையில் மதுபானங்களை அடைத்து விற்பனைசெய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
ஒரு பாட்டிலை இருவர்பிரிக்கும்போது, அதில் விஷம் கலப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இதைத் தவிர்க்க, 90 மி.லி. அளவில் காகிதக் குடுவையில் மதுபானத்தை அடைத்து விற்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்", என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil