Advertisment

சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து!

சேலம் கோவை பயணிகள் ரயில் 18 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

author-image
Jayakrishnan R
New Update
Salem Coimbatore passenger train is suspended for 18 days

சேலம்- கோவை பயணிகள் ரயில்

சேலம்- கோவை பயணிகள் ரயில் புதன்கிழமை (அக்.12) முதல் 18 நாள்களுக்கு பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

Advertisment

சேலம்- கோவை பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர இதர நாள்களில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பயணிகள் ரயிலில் பெரும் கூட்டம் தினந்தோறும் பயணிக்கும்.

இந்த ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் அடுத்த 18 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது. முன்னதாக, சேலம்- கோவை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.

இதையடுத்து பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தண்டவாள பராமரிப்பு பணிகளுக்கு பின்னர் அக்.30ஆம் தேதிக்கு பின்னர் சேலம்- கோவை பயணிகள் ரயில் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம்- கோவை பயணிகள் ரயில் 06802 என்ற எண்ணிலும் மறுமார்கமாக கோவை-சேலம் 06803 என்ற எண்ணிலும் இயக்கப்பட்டுவந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment