பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா ஐந்து நாள் பரோலில் இன்று வெளியே வந்துள்ளார். இதனால், காலை முதலே சிறை வளாகத்தில் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்து இருந்தனர். சசிகலாவை பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அங்கு காத்திருந்தனர்.
சிறையில் இருந்து சசிகலா வெளிவந்து காரில் ஏறிச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.