சிறையில் கண்டித்தும் திமிறும் தினகரன்; அதிர்ச்சியில் சசிகலா!

உன்னை பதவியில் இருந்து நீக்க ஒரு நொடிப் போதும் எனக்கு.

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு, நேற்று காலை முதல் டிடிவி தினகரனை, தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகின்றனர். தற்போது வரை மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள் அவரை சந்தித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தினகரனுக்கு ஆதரவு தருவார்களா என்பது அடுத்த விஷயம். ஆனால், சிறையில் தன்னை சந்தித்த தினகரனை, சசிகலா கடுமையாக கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

தினகரன் சசிகலாவை சந்தித்த போது, ‘ஜெயலலிதா இறந்த பிறகு இந்த கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியது நான் தான். ஆனால், அதுபற்றியெல்லாம் வெளியே பேசாமல், கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக நீ கூறியிருக்கிறாய். உன்னை பதவியில் இருந்து நீக்க ஒரு நொடிப் போதும் எனக்கு. உனக்கு பதில் குடும்பத்தில் இருந்து வேறு யாராவது ஒருவரை நான் பதவிக்கு கொண்டுவந்துவிடுவேன். 60 நாட்களுக்கு எந்தவித செயல்பாடும் இல்லாமல் அமைதியாக இரு’ என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், சட்டமன்ற உறுப்பினரக்ள் தொடர்ந்து தினகரனை சந்தித்து வருகின்றனர். இதில் உச்சக்கட்டமாக, நேற்று பேட்டியளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் “அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் செய்தி வரும். இன்னும் தினகரனின் ஆதரவு பெருகும்” என்று தெரிவித்திருப்பது எடப்பாடி அணிக்கோ, ஜெயக்குமாருக்கோ அதிர்ச்சி அளித்திருக்குமா என தெரியவில்லை. ஆனால், பொறுமையாக இருக்கும்படி கூறியும், தினகரன் தரப்பிலிருந்து இவ்வளவு வெளிப்படையான கருத்து வெளியாகியிருப்பது சசிகலாவை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

×Close
×Close