சிறையிலிருந்து சசிகலா ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்றாரா? வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த டி.ஐ.ஜி. ரூபா

ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது வீட்டுக்கு சசிகலா சிறையிலிருந்து சில சமயங்களில் சென்று வந்ததற்கான ஆதாரங்களை டி.ஐ.ஜி. ரூபா சமர்ப்பித்தார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையிலிருந்து ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது வீட்டுக்கு சில சமயங்களில் சென்று வந்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.சி. ரூபா குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பல புகார்களை எழுப்பி, தன் மேலதிகாரியான டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் மீது, கடந்த ஜூலை மாதம் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல், பரப்பன அக்ரஹாரா சிறையில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாகவும் அவர் அறிககி அதில், சசிகலாவுக்கு தனி கட்டில், சமையலறை, சமைக்க சிறையிலுள்ள ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பதாக பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சியும் வெளியானது. மேலும், தன் அறையிலிருந்து சசிகலா மற்றும் இளவரசி, பேக் ஒன்றுடன் சாதாரண உடையில் எங்கோ கிளம்பத் தயாராக இருப்பது போன்ற சிசிடிவி காட்சியும் வெளியானது. இதையடுத்து, டி.ஐ.ஜி. ரூபா போக்குவரத்து துறை டி.ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் இதுகுறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஆளுக்கு ஒரு பையுடன், பரப்பன அக்ரஹாரா சிறையின் பிரதான நுழைவுவாயிலில் இருந்து நுழைவதுபோல் சிசிடிவி காட்சி ஆதாரத்தை டி.ஐ.ஜி. ரூபா ஊழல் தடுப்பு பிரிவிடம் கடந்த சனிக்கிழமை சமர்ப்பித்தார்.

இந்நிலையில், சிறையிலிருந்து சசிகலா ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டுக்கு சில சமயங்களில் சென்று வந்ததாகவும், அதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என அந்த அறிக்கையில் டி.ஐ.ஜி. ரூபா குறிப்பிட்டிருப்பது தெரிய வந்தது.

சிறையின் நுழைவுவாயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவிலும், கேட் 1 மற்றும் கேட் 2 ஆகிய இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் இது தெரியவந்ததாக, அந்த அறிக்கையில் ரூபா குறிப்பிட்டார்.

மேலும், சசிகலா விவகாரத்தில் கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு சிறைத்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தன்

சசிகலா மீது டி.ஐ.ஜி. ரூபா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், அதற்கு தகுந்த சாட்சியங்களையும் அளித்துவருவது, சசிகலாவுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close