/tamil-ie/media/media_files/uploads/2017/06/sasikala-75912.jpg)
எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா, அதிமுக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது : ‛‛வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எக்ஃகு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர்.
இந்தியாவில் 3-வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது. முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் ''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.