சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த அப்ரூவர் மனு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சம்பவம் தொடர்பான வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சம்பவம் தொடர்பான வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

author-image
Balaji E
New Update
sathankulam ins madurai hc

2020 ஜூன் 19-ம் தேதி, ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் கைது செய்து தாக்கியதால் உயிரிழந்தனர்.

சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சம்பவம் தொடர்பான வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

Advertisment

2020 ஜூன் 19-ம் தேதி, ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் கைது செய்து தாக்கியதால், அவர்கள் உயிரிழந்தனர். இந்த விசாரணையை சி.பி.ஐ மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு, ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சரிவர நடைபெற்று வருகிறது என்றும், முக்கிய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் சாட்சியம் அளித்துவிட்டனர் என்பதால், ஸ்ரீதரின் சாட்சியம் தேவையில்லை என வாதிடப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த மனுவை நிராகரித்து, ஆகஸ்ட் 4 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Madurai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: