Advertisment

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை; பணி ஆணையை வழங்கினார் முதல்வர்

சாத்தான்குளத்தில் போலீசார் சித்திரவதையில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி இன்று ஜெயராஜின் மகள் பெர்சிக்கு அரசுப் பணி ஆணையை வழங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sathankulam father son murder, sathankulam jayaraj bennix murder, சாத்தான்குளம், ஜெயராஜ், பென்னிக்ஸ், ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை, முதல்வர் பழனிசாமி, sathankulam jeyaraj daughter percy get government job order, cm edapadi k palaniswami gave govt job order to jeyaraj daughter

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி இன்று ஜெயராஜின் மகள் பெர்சிக்கு அரசுப் பணி ஆணையை வழங்கினார்.

Advertisment

தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கடந்த ஜூன் மாதம் போலீஸ் விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 10 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் சித்திரவதையில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக, நீதி கேட்டு பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், ஜெயராஜின் மூத்த மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்சிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆனையை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார்.

முதல்வரிடம் அரசுப் பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், இந்த சோதனையில் இருந்து மீள்வதற்காக தமிழக அரசு தனக்கு அரசுப் பணி வழங்கியிருக்கிறது. மேலும், தனது தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தனது தந்தை, சகோதரரின் கொலை வழக்கை சிபிஐ விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று பெர்சி கேட்டுக்கொண்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment