சவுக்கு சங்கர் கைது? போலீஸ் குவிப்பால் பரபரப்பு

தன் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்றும் சவுக்கு சங்கர் இன்று (நவம்பர் 1, 2025) ஒரு அவசர வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தன் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்றும் சவுக்கு சங்கர் இன்று (நவம்பர் 1, 2025) ஒரு அவசர வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

author-image
abhisudha
New Update
Savukku Shankar Arrest

Savukku Shankar Arrest

சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் தூண்டுதலின் பேரில், தன் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்றும் சவுக்கு சங்கர் இன்று (நவம்பர் 1, 2025) ஒரு அவசர வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

காவல்துறை அலுவலகம் வருகை: சம்மன் வாங்க மறுப்பு

சவுக்கு சங்கர் தன் வீடியோவில் பேசியதாவது:

"தொடர்ந்து என் மீது வழக்குகளைப் பதிவு செய்துக்கிட்டே இருக்காங்க. சமீபத்தில் ஏழு கி.மீ. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செஞ்சப்போ, உயர் நீதிமன்றம் சொன்னதன் பேரில் விசாரணைக்கு ஒத்துழைச்சேன். இப்போ திடீர்னு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து மூணு போலீசார் என்னைப் பார்க்க வந்திருக்காங்க."

இது என்ன வழக்குன்னு கேட்டா, அவங்களுக்குத் தெரியலைன்னு சொல்றாங்க. ஆன்லைன்ல எஃப்.ஐ.ஆர். பார்க்கப் போனா, அதை பிளாக் பண்ணி வச்சிருக்காங்க. ஏன் பிளாக் பண்ணாங்க? எஃப்.ஐ.ஆர் நகல் கிடைச்சுட்டா, உடனே நான் உயர் நீதிமன்றத்துக்குப் போய் வழக்கை ரத்து செஞ்சுடுவேன்ங்கிறதுக்காகத்தான்!"

நான் போலீசாரிடம், 'சார், நீங்க எஃப்.ஐ.ஆர் காப்பி கொடுக்கலைனா, நான் சம்மனை வாங்க முடியாது'ன்னு சொல்லிட்டேன். இப்போ அவங்க இங்கேயே உட்கார்ந்து, 'உயர் அதிகாரிகளிடம் பேசிட்டுத்தான் போவோம்'னு சொல்லிட்டாங்க."

Advertisment
Advertisements

"வெளியே வர 6 மாசம் ஆகும்!" 

தற்போதைய சூழ்நிலை குறித்து சவுக்கு சங்கர் மேலும் அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

"இப்போ அலுவலகத்துக்குக் கீழே ஒரு 10 போலீஸ்காரங்களும் ஜீப்பும் ரெடியா இருக்கு. சோ, எந்த நேரம் வேணும்னாலும் நான் கைது செய்யப்படலாம். எனக்கு வந்த தகவலின் படி, இப்போதைக்கு 20 வழக்குகள் சென்னை மாநகர காவல் துறையால் என் மீது போடப்பட்டு நிலுவையில் இருக்கு."

நான் திடீர்னு காணாம போயிட்டா, நீங்க தேடுவீங்கன்னு தெரியும். இந்த 20 வழக்குகள்லயும் நான் ரிமாண்ட் ஆகி, ஒவ்வொரு வழக்குக்கும் ஜாமீன் வாங்கி, ஷ்யூரிட்டி நிப்பாட்டி வெளியில வர மூணு முதல் ஆறு மாசம் ஆகும். இது மூலமா, தேர்தல் சமயத்தில் நான் இங்க இருக்க மாட்டேன்ங்கிறதை உறுதி செஞ்சுக்கிறாங்க.

இந்த விஷயத்தை நேயர்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது என் கடமை. நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்," என்று கூறி சவுக்கு சங்கர் அந்த அவசர வீடியோவை முடித்துக் கொண்டார்.

Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: