Advertisment

விஜிலென்ஸ் அதிகாரி முதல் யூடியூபர் வரை- ‘சவுக்கு’ ஷங்கர் சர்ச்சை ஆனது எப்படி?

"கடந்த காலங்களில் அவர் பல கைது வாரண்டுகளை எதிர்கொண்டார், ஆனால் துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் அவருடைய நலம் விரும்பிகள் இருந்ததால் கைது செய்யப்படவில்லை. அது இப்போது மாறிவிட்டது, ”என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

author-image
Arun Janardhanan
New Update
savukku shankar

‘Savukku’ Shankar

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Arun Janardhanan

Advertisment

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்குசங்கர், பல ஆண்டுகளாக பல சட்ட சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும் டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து செயலில் ஈடுபட்டு வருகிறார். 

ஒரு நேர்காணலின் போது காவல்துறையினரையும், குறிப்பாக பெண் அதிகாரிகளையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, புதிய வழக்குகளை எதிர்கொள்கிறார்.

"கடந்த காலங்களில் அவர் பல கைது வாரண்டுகளை எதிர்கொண்டார், ஆனால் துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் அவருடைய நலம் விரும்பிகள் இருந்ததால் கைது செய்யப்படவில்லை. அது இப்போது மாறிவிட்டது, ”என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

வியாழன் அன்று, சென்னை உயர்நீதிமன்றம் சங்கர் சம்பந்தப்பட்ட பல மனுக்களை விசாரித்தது மற்றும் ஆன்லைன் உள்ளடக்க தளங்களின் தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியது.

நீதிபதிகள் ஏ டி ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஒரு பகுதியாக இருந்த நீதிபதி கே குமரேஷ் பாபு, “சில யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன" என்று கூறினார்.

முன்ஜாமீன் வழங்குதல், காவல் வன்முறை, கோவை மத்திய சிறையில் இருந்து சங்கரை இடமாற்றம் செய்யக் கோரிய மனுக்களை அவர்கள் விசாரித்தனர்.

சங்கரின் தாயார் கமலாவும், சிறையில் தனது மகனுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து நீதி விசாரணை கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த காவல்துறை அதிகாரிகள், மே 4ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்ட பிறகு, தேனியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் நடந்த சாலை விபத்து தான், அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்குக் காரணம் என்று கூறினர்.

சமீபத்தில் யூடியூப்பில் அளித்த பேட்டிக்காக சங்கர் மே 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதில், தமிழகத்தில் உள்ள பல பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், வசதியான இடமாற்றம், பதவி உயர்வுக்காக மூத்த ஆண் அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொள்வதாக பேசினார்.

பெண்களின் கண்ணியத்தை அவமதித்தது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். தேனி போலீசாரால் கைது செய்யப்பட்ட போது கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் புகாரின் அடிப்படையில் சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் ஆகியோரின் புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் அவர் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளும் யூடியூப் நேர்காணல் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் மேலாளர் பெலிக்ஸ் ஜெரால்ட், இதில் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நேர்காணலை நடத்தியதும் ஜெரால்டு தான்.

சங்கர், முன்னதாக விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் (DVAC) பணிபுரிந்தவர்.

2008 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் சட்ட அமலாக்க முகமைகளின், சட்ட விரோதமான ஒயர்டேப்பிங் நடைமுறைகளை அம்பலப்படுத்தும் ஆடியோ பதிவுகளை வெளியிட்டபோது, ​​அவர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றார், இதன் விளைவாக திமுக அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். அந்த நேரத்தில் கைது செய்யப்பட்ட போதிலும், சங்கர் ஊழலை கடுமையாக விமர்சிப்பவராக வெளிப்பட்டார்.

பின்னர் அவர் சவுக்கு மீடியாவை தொடங்கினார், இது ஒரு வெப் போர்டல் மற்றும் யூடியூப் சேனலை உள்ளடக்கியது. இப்படி பல ஆண்டுகளாக, ஷங்கரின் வரம்பு விரிவடைந்தது, குறிப்பாக யூடியூப்பில், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் வடிகட்டப்படாத கருத்துக்களுக்காக அவர் கணிசமான ஆதரவைப் பெற்றார்.

2008-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட சித்திரவதைக்கு எதிராக திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

2022 ஆம் ஆண்டில், நீதித்துறைக்கு எதிரான கருத்துக்களுக்காக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

ஷங்கர் வெளிவந்த பிறகு தனது செயல்பாட்டைத் தொடர்ந்தார், சிறைக்கு பின்னால் தனது அனுபவங்களை விவரிக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். ஒரு முக்கிய OTT பிளார்ட்ஃபார்ம் அவரது வாழ்க்கையை வலைத் தொடரை தயாரிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, ஆனால் பின்னர் திட்டத்தை கைவிட்டது.

இருப்பினும், சமீப ஆண்டுகளில், அவர் அதிமுகவுடன் இணைந்ததாக விமர்சிக்கப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தார்.

நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பல முக்கிய நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் சங்கரின் தமிழ் இணையதளத்தை முடக்கி 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்த இணையதளம், ப்ராக்ஸி URLகள் மூலம் தொடர்ந்து செயல்பட்டது.

Read in English: From vigilance officihttps://indianexpress.com/article/cities/chennai/from-vigilance-official-to-firebrand-youtuber-how-savukku-shankar-became-controversys-favourite-child-9319156/al to firebrand YouTuber – how ‘Savukku’ Shankar became controversy’s favourite child

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment