கிழிந்த சீருடை அணிந்திருந்த போதும் பணத்தின் மீது வராத ஆசை.. போலீசாரிடம் சல்யூட் வாங்கிய சிறுவன்!

வனது கிழிந்த பள்ளி சீருடையை பார்க்கும் போது என் கண்கள் கலங்கியது.

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை… மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பது இல்லை.. இந்த செய்தியை படித்து முடிக்கும் போது இந்த வரிகள் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்து.

படிப்பது அரசாங்க பள்ளி, பெற்றோர்கள் கூலித் தொழிலாளி, கிழிந்த சீருடன், தினமும் பள்ளிக்கு சென்று வரும் வழியில் கேட்பாரற்ற நிலையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தால் உடனே என்ன தோணும்? உங்களுக்கு தோன்றிய எதுவே 7 வயது சிறுவன் முகமது யாசினுக்கு தோன்றவில்லை.

”ஐய்யோ பாவம்! யாரோ கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தவறுதலாக ரோட்டில் விட்டு சென்றுள்ளன. உடனடே இந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எப்படி அவர்களை கண்டுப்பிடிப்பது? சரி உடனே பள்ளி ஆசிரியரிடம் இதைப் பற்றி கூறி அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வோம்” ரோட்டில் கிடைந்த 50 ஆயிரம் பணத்தை பார்த்த 7 வயது சிறுவன் யாசினுக்கு தோன்றியது இவை மட்டுமே.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த பாட்சா – அப்ரோஜ் பேகம் தம்பதிகளின் மகன் தான் முகமது யாசின். அங்குள்ள அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். பள்ளிக்கு சென்ற வழியில் ரோட்டில் கிடைந்த 50 ஆயிரம் பணத்தை பார்த்த சிறுவன் யாசின், உடனே தனது ஆசிரியருடன் சேர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று எஸ்பியிடம் பணத்தை பத்திரமாக ஒப்படைத்துள்ளான்.

சிறுவனின் செயலைக் கண்டு ஓட்டு மொத்த காவல் துறை அதிகாரிகளும் நெகிழ்ச்சியுடன் சிறுவன் யாசினை மன தார பாராட்டியுள்ளனர். உடனே யாசினின் பெற்றோரை அழைத்து அவர்களையும் பாராட்டியுள்ளனர். இதுக் குறித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் “ “சிறுவன் யாசினின் எங்களை நெகிழ வைத்து விட்டான். வறுமையான நிலையில் அவனது நேர்மை எங்கள் உள்ளங்களை கவர்ந்து விட்டது. விரைவில் அவனுக்கு பாராட்ட விழா நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம். கூடவே அவனது கிழிந்த பள்ளி சீருடையை பார்க்கும் போது என் கண்கள் கலங்கியது. அவனுக்கு புதிய பள்ளி சீருடை வாங்கி தர போகிறோம்” என்றார்.

சிறுவனின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

×Close
×Close