பழனி முருகன் கோவிலில், இந்துக்கள் அல்லாதோர் நுழைய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுக்கு எதிராக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “இந்து என்ற வார்த்தையே இல்லாத சங்க இலக்கியங்களிலேயே முருக வழிபாடு பற்றிய செய்தியுள்ளது” எனத் தெளிவுப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து, “மாற்று மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் தமக்கு விருப்பமான இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு; அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
முருகனை இந்து கடவுள் என்பதும், இந்துக்கள் மட்டுமே முருகனை வழிபட வேண்டும் என்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் முருகனை முப்பாட்டனாக வழிபடுகின்றனர்.
மேலும், “உறுதிமொழி அளித்தால் உள்ளே அனுமதிக்கலாம் என்றால் உறுதிமொழியின் உண்மைத்தன்மையை யார் உறுதி செய்வது?” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதையடுத்து, “மாற்று மதத்தைச் சேர்ந்தவர் அறநிலையத்துறை அதிகாரி என்றால் அவரை கோயிலுக்குள் அனுமதிப்பீர்களா? இல்லையா? எனவும் வினாயெழுப்பி உள்ளார்.
தொடர்ந்து, “மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“