scorecardresearch

பரந்தூர் செல்வேன்; முடிந்தால் அரசு என்னை தடுத்துப் பார்க்கட்டும்: சீமான்

பரந்தூர் விமாநிலையம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு சென்று ஆதரவளிக்க உள்ளதாகவும், முடிந்தால் தன்னை தமிழக அரசு தடுத்துப் பார்க்கட்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Tamil News
Tamil News Updates

பரந்தூர்  விமாநிலையம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு சென்று ஆதரவளிக்க உள்ளதாகவும், முடிந்தால் தன்னை தமிழக அரசு தடுத்துப் பார்க்கட்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2 வது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பரந்தூர்,  ஏகனாபுரம்,  நெல்வாய் உள்பட 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நிலம் கையகப்படுத்தபடுவதால், பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்நிலையில் இதை எதிர்த்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் 200 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இதுதொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கூறியதாவது: போராட்டம் தொடங்கிய நிலையில், பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுபோல் இப்போது மீண்டும் அவர்களை சந்திக்க செல்வேன். சூழலியல் அமைப்புகளையும்,  சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல,  அப்போது முடிந்தால் என்னை தடுத்து பார்க்கட்டும்” என்று அவர் கூறியுள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Seeman on paranthu airport

Best of Express