அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக மின்சாரத்துறை அமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக, ஏமாற்றியதாக வழக்குத் தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று, சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைவரை சென்றது. மேலும் துணை ராணுவத்தினர் அவரது வீட்டில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி நள்ளிரவில், கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியால் கதறி அழுதார். மருத்துவ உதவியை கேட்டார். பின்பு அவர் ஓமந்தூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தனர்.
சுயநிலையில் இல்லை என்றும், ஈ.சி.ஜி சரியான நிலையில் இல்லை என்று சேகர் பாபு கூறினார். இந்நிலையில் அமலாகத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால், அவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் இடத்திற்கு வேறு அமைச்சர்களை நியமிக்க ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பொறுப்பை முதல்வரே ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூத்த அமைச்சர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் ஏ.வ.வேலு, ஐ.பெரியிசாமி, கே.என் .நேரு ஆகியோரின் பெயர் பட்டியலில் உள்ளது. இதில் யாராவது தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“