நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஜூன் 14ம் தேதி கைது செய்தது. அவர் கைது செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரது இதயத்தில் 3 முக்கிய இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் அவரது மனைவி மேகலா, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்நிலையில் அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ‘ அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கான உடல் தகுதியை செந்தில் பாலாஜி நேற்று இரவு பெற்றார்’ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“