தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பணி ஆணை பெற்று தருவதாக கூறிபணம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், அமலாக்கத்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த மாதம் அவரை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டது. இதனால, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் உடல் நலம் பெற வேண்டி அவரது தந்தை-தாய் மற்றும் மனைவி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இடர்களை களையும் திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
திருநெடுங்களநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட பின் பிரகாரத்தில் உள்ள வராகி அம்மனையும், ஏனைய பரிவார தெய்வங்களையும் வணங்கி சென்றனர்.
இந்நிலையில் அவர் உடல் நலம் பெற வேண்டி அவரது தந்தை-தாய் மற்றும் மனைவி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இடர்களை களையும் திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
திருநெடுங்களநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட பின் பிரகாரத்தில் உள்ள வராகி அம்மனையும், ஏனைய பரிவார தெய்வங்களையும் வணங்கி சென்றனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“