“ஜெயலலிதா, சசிகலா, கனிமொழி, ஆ.ராசா எல்லோரும் திருட்டுப்பயல்கள்” – நடிகர் சித்தார்த்

‘ஜெயலலிதா, சசிகலா, கனிமொழி, ஆ.ராசா எல்லோரும் திருட்டுப்பயல்கள். #தமிழன்டா’ என நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Citizen amendment bill twitter tussle between actor siddharth and TN minister Jayakumar

‘ஜெயலலிதா, சசிகலா, கனிமொழி, ஆ.ராசா எல்லோரும் திருட்டுப்பயல்கள்’ என நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“ராசா, கனிமொழி நடித்த ‘திருட்டுப்பயலே 1’ விமர்சனம் இன்று வெளியாகிறது. இருவருக்கும் வாழ்த்துகள். ஜெ.ஜெயலலிதா, சசி மற்றும் குழுவினர் நடித்த ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிசல்ட்டும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். #தமிழன்டா” என ட்விட்டரில் கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.

siddharth tweet

சித்தார்த்தின் இந்த ட்வீட், அதிமுக மற்றும் திமுக தொண்டர்களை கோபமடையச் செய்துள்ளது. இந்த ட்வீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

2ஜி வழக்கில் இறுதித்தீர்ப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது. இதில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.ஷைனி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வந்ததும் தன்னுடைய ட்வீட்டை சித்தார்த் நீக்கிவிட்டார்.

அதற்குப் பதிலாக, “சூப்பர் ஹிட் ரிப்போர்ட். அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தூய்மையான இந்திய அரசியலுக்கு வாழ்த்துகள். இனிமேல் 2ஜி கிடையாது. அனைவரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நில்லுங்கள்” என்று மற்றொரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Siddharth tweet about 2g case and jayalalithaa

Next Story
2ஜி வழக்கின் ஏற்படுத்திய பாதையும் பாதிப்புகளும்…2G Case Judgement LIVE UPDATES
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com