scorecardresearch

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

sp

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட கண்காணிப்பாளராக சரவணன் பணியாற்றி வந்தார். அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி ஆகிய பணியாற்றிய பல்வீர்சிங் பல்வேறு விசாரணை கைதிகளிடம் பற்களை பிடிங்கியதாக புகார்  எழுந்தது.  

இதையடுத்து பல்வீர் சிங் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு , கட்டாய காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டார். அம்பை சரக்கத்திற்கு புதிய சரக காவல்துறை கண்காணிப்பாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரவணன் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நெல்லை மாவட்ட காவல் கூடுதல் எஸ்பியாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் நெல்லை மாவட்ட எஸ்பியாக சிலம்பரசன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Silambarasan to take over as new sp of tirunelveli