சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 48 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால் போதிய நீதிபதிகள் இல்லாமல், பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், 6 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். பவானி சுப்புராயன், ஜெகதீஷ் சந்த்ரியா, சுவாமிநாதன், தண்டபாணி, தெய்வசிகாமணி, அப்துல் குதோஷ் ஆகிய ஆறு நீதிபதிகள் நியமனத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 54 ஆக உயர்ந்துள்ளது.

×Close
×Close