புதிதாக 30 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழகத்தின் 4 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதல், இதுவரை 3 கட்டங்களாக 60 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டடுள்ளது. இந்நிலையில், இன்று மேலும் 30 புதிய ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது.
அதில் குறிப்பிடும்படியாக, தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
புதிய 30 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல்
- கேரள மாநிலம் - திருவனந்தபுரம்
- சத்தீஸ்கர் மாநிலம் - நயா ராய்பூர்
- குஜராத் மாநிலம் - ராஜ்கோட்
- ஆந்திர மாநிலம் - அமராவதி
- பிஹார் மாநிலம்- பாட்னா
- தெலங்கானா மாநிலம் - கரீம்நகர்
- பிஹார் மாநிலம்- முசாபர் நகர்
- புதுச்சேரி - புதுச்சேரி
- குஜராத் மாநிலம் - காந்திநகர்
- ஜம்மு - காஷ்மீர் - ஸ்ரீநகர்
- மத்தியப் பிரதேச மாநிலம் - சாகர்
- ஹரியானா மாநிலம் - கர்னால்
- மத்தியப்பிரதேச மாநிலம் - சட்னா
- கர்நாடக மாநிலம் - பெங்களூரு
- ஹிமாச்சலப் பிரதேசம் - சிம்லா
- உத்தராகாண்ட் மாநிலம் - டேராடூன்
- தமிழ்நாடு - திருநெல்வேலி
- தமிழ்நாடு - திருப்பூர்
- தமிழ்நாடு - திருச்சிராப்பள்ளி
- மகாராஷ்டிரா மாநிலம் -சின்ச்வாட்
- மகாராஷ்டிரா மாநிலம் - பிம்ப்ரி
- சட்டீஸ்கர் - பிலாஸ்பூர்
- அருணாச்சலப் பிரதேச மாநிலம் - பாசிகட்
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் - ஜம்மு
- குஜராத் மாநிலம் - தாஹோத்
- உத்தரப்பிரதேச மாநிலம்-ஜான்சி
- மிசோரம் மாநிலம் - அய்ஸ்வால்
- உத்திரபிரதேச மாநிலம் - அலகாபாத்
- உத்திரபிரதேச மாநிலம் - அலிகார்
- சிக்கிம் மாநிலம் - கேங்டோக்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.