புதிய ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் தமிழத்தின் 4 நகரங்கள்... திருச்சி, திருநெல்வேலிக்கு இடம்!

புதிதாக 30 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழகத்தின் 4 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதல், இதுவரை 3 கட்டங்களாக 60 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டடுள்ளது. இந்நிலையில், இன்று மேலும் 30 புதிய ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது.

அதில் குறிப்பிடும்படியாக, தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

புதிய 30 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல்

  1. கேரள மாநிலம் – திருவனந்தபுரம்
  2. சத்தீஸ்கர் மாநிலம் – நயா ராய்பூர்
  3. குஜராத் மாநிலம் – ராஜ்கோட்
  4. ஆந்திர மாநிலம் – அமராவதி
  5. பிஹார் மாநிலம்- பாட்னா
  6. தெலங்கானா மாநிலம் – கரீம்நகர்
  7. பிஹார் மாநிலம்- முசாபர் நகர்
  8. புதுச்சேரி – புதுச்சேரி
  9. குஜராத் மாநிலம் – காந்திநகர்
  10. ஜம்மு – காஷ்மீர் – ஸ்ரீநகர்
  11. மத்தியப் பிரதேச மாநிலம் – சாகர்
  12. ஹரியானா மாநிலம் – கர்னால்
  13. மத்தியப்பிரதேச மாநிலம் – சட்னா
  14. கர்நாடக மாநிலம் – பெங்களூரு
  15. ஹிமாச்சலப் பிரதேசம் – சிம்லா
  16. உத்தராகாண்ட் மாநிலம் – டேராடூன்
  17. தமிழ்நாடு – திருநெல்வேலி
  18. தமிழ்நாடு – திருப்பூர்
  19. தமிழ்நாடு – திருச்சிராப்பள்ளி
  20. மகாராஷ்டிரா மாநிலம் -சின்ச்வாட்
  21. மகாராஷ்டிரா மாநிலம் – பிம்ப்ரி
  22. சட்டீஸ்கர் – பிலாஸ்பூர்
  23. அருணாச்சலப் பிரதேச மாநிலம் – பாசிகட்
  24. ஜம்மு காஷ்மீர் மாநிலம் – ஜம்மு
  25. குஜராத் மாநிலம் – தாஹோத்
  26. உத்தரப்பிரதேச மாநிலம்-ஜான்சி
  27. மிசோரம் மாநிலம் – அய்ஸ்வால்
  28. உத்திரபிரதேச மாநிலம் – அலகாபாத்
  29. உத்திரபிரதேச மாநிலம் – அலிகார்
  30. சிக்கிம் மாநிலம் – கேங்டோக்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close