மாவட்டத் தேர்தல் அலுவலரும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளருமான கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வருகிற 9.07.2017 (நாளை) மற்றும் 23.07.2017 ஆகிய இரு தினங்களில், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
1.1.2017-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் விடுப்பட்ட வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான சிறப்புப் பணிகள், 1.7.2017 முதல் 31.7.2017 வரை நடைபெறும்.
எனவே, 18 முதல் 21 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், மேற்கண்ட சிறப்பு முகாம் நாள்களில் முகாமிற்குச் சென்று, இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.