திபாவளி பண்டிகையையொட்டி சென்னை-திருநெல்வேலி இடையே அக்.,17, 20-ம் தேதிகளில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டதாவது: சிறப்பு ரயில் ( எண் 06017) வரும் 17-ம் தேதி காலை 7 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலானது, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், கடலூர் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருநெல்வேலியில் இருந்து 20-ம் தேதி காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06018), மாலை இரவு 7:30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயிலானதுவாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருது நகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விழுப்புரம், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிகல்கள் முன்பதிவில்லாதது என்பது கவனிக்கத்தக்கது.