மெரினாவில் தன் துன்பத்தை மறந்து குளிர்ந்த காற்று, மணல் மற்றும் கடலின் அலைகளை உணருவது புத்துணர்ச்சியளிப்பதாக கூறுவோம். ஆனால் அந்த வசதி எல்லோருக்கும் அமையும் வண்ணம் இல்லாமல் இருந்தது வருத்தமளித்தது. அதனால், தமிழக அரசு முன்னிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் பிற ஆதரவு குழுக்கள் இணைந்து மெரினா கடற்கரையில், சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய வகையில் டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை ஆறு நாட்களுக்கு பிரத்யேக நடைபாதை அமைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இது வருட இறுதி விருந்தாகும், அவர்கள் மெரினாவை எப்போதும் கண்டு மகிழ்ந்தனர், ஆனால் வெறுப்பூட்டும் தூரத்தில் இருந்து மட்டுமே அதை அனுபவிக்க முடிந்தது. குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரியவர்கள் கடலின் அலைகளை உணரும் வகையில் கடற்கரையின் ஒரு பகுதி மீண்டும் அணுகக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது பாராட்டிற்குரியதாக இருக்கிறது.
மெரினா கடற்கரைக்கு வந்தவுடன், கடலை பார்க்க மற்றும் உணர விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் அழைத்து செல்வர். இதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடம்தோறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் நாளான டிசம்பர் 3ஆம் தேதி, பெருநகர சென்னை மாநகராட்சி, சில ஆண்டுகளாக, சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்து, நடைபாதையை அமைத்து, மணலில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு மழை காரணமாக டிசம்பர் 3ம் தேதி விழாவை நடத்த முடியவில்லை. ஃபேஸ்புக் பதிவின்படி, கோவிட்-19 காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஏற்பாட்டை எலியட்ஸ் கடற்கரையின் மணலில் டிசம்பர் 5 ஆம் தேதி ரெயின்ட்ராப்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு உதவிகாரம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் ஆகியவை செய்தன. அன்றைய தினம் 170க்கும் மேற்பட்டோர் வந்திருந்ததாக ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலானோர் சக்கர நாற்காலியில் மணல் வழியாக அலைவது அல்லது ஊன்றுகோலில் நடப்பது கடினம். எல்லா ஏற்பாடுகளும் இருக்கும் போது அனுபவம் வித்தியாசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரத்தால் ஆன பாதையை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி திறந்துவைத்தார்.
வருடத்தில் ஒருமுறை அமைக்கப்படும் இந்த நடைபாதையை நிரந்தரமாக அமைக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், அனைத்து சுற்றுலா தளங்களிலும் இதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”