Advertisment

கடலூர் பேருந்து விபத்து; முதல்வர் அறிவித்த ரூ. 2 லட்சம் நிதியை நேரில் வழங்கிய அமைச்சர்கள்

கடலூர் பேருந்து விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி; முதல்வர் ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Cuddalore bus accident relief

கடலூர் பேருந்து விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி; முதல்வர் ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பாக்கம் நாராயணபுரம் அருகே தனியார் துர்கா பஸ் உடைய Right Side டயர் வெடித்ததால் ஏதிரில் வந்த தனியார் பஸ் மீது மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் இரண்டு லட்சத்தை இன்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியை வழங்கினார்.

Advertisment

மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 11 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களையும் அமைச்சர்கள்   பன்னீர்செல்வம், கணேசன், கடலூர் கலெக்டர் பார்வையிட்டனர். இந்த விபத்தில் இரு பஸ்களில் பயணம் செய்த 80 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த பயணிகளை பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை. அளிக்கப்பட்டதில் 4 பேர் பலியானர்கள். மேலும் துரை என்பவர் கடுமையான பாதிப்புடன் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளார்.

இதையும் படியுங்கள்: கடலூரில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு:  80 பேர் படுகாயம்

publive-image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் SP ராஜாராம் மருத்துவமனையில் முகாமிட்டு பஸ் விபத்திற்கு உள்ளான பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி இருந்தனர்

publive-image

இச்சம்பவம் தகவல் அறிந்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய நோயாளிகளுக்கு பழங்கள், ரெட்டி போன்றவைகள் வழங்கி ஆறுதல் கூறினார். இதே போல் தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர் செல்வம் பஸ் விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறி பழங்கள் வழங்கினார்.

publive-image

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், கடலூர் மாவட்டம் ஆனது விபத்துகளில் அதிக விபத்தில்லா தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது. தற்பொழுது தனியார் பஸ்ஸில் முன்பாக டயர் திடீரென்று வெடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் எதிரில் வந்த தனியார் பஸ் மீது மோதியதில் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இறந்தவரின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சமும், பெரிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம், சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 25000 உடனடியாக வழங்கும் படி உத்திரவிட்டார். அதன் அடிப்படையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சம் மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டுள்ளது. என கூறினார்.

publive-image

இச்சம்பவத்தில் 4 பேர்  விபத்தில் பலியானதாகவும், ஒருவர் மிகுந்த கவலைகிடமாக உள்ளதாகவும் கூறினார். விபத்தில் சிகிச்சை பெறுபவருக்கு உதவியாக மருத்து குழுவினர், செவிலியர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க தனியார் மருத்துவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டதை வாழ்த்தினார். மேலும் தாமாக முன்வந்து விபத்து சிகிச்சை பெறுபவர்களுக்கு இரத்ததானம் செய்தவர்களையும் பாராட்டினார்.

publive-image

பின்னர் விபத்தில் மரணம் அடைந்த 4 பேரின் உடலில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அமைச்சர் கணேசனும் இறந்தவர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஜயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரும் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stalin Cuddalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment