ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளராக ஸ்டாலின் நியமனம்

ரஜினி மக்கள் மன்ற தலைவர் வி.எம்.சுதாகர் மாவட்டவாரியாக ஆய்வு நடத்தி, நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற தலைவர் வி.எம்.சுதாகர் மாவட்டவாரியாக ஆய்வு நடத்தி, நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

வேலூர், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர். கடந்த 27ம் தேதி தூத்துக்குடியில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதையடுத்து இன்று ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளராக ஏ.ஜே.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக, வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார்.

thoothukudi rajini
மாவட்ட இணை செயலாளராக சக்தி முருகன், மாவட்ட துணை செயலாளர்களாக டி.எஸ்.பி.எஸ். பெரியசாமிநாதன், முகமது கனி, ஞானியப்பன், ஆர்.ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இளைஞரணி செயலாளராக ஆர். வேல்முருகனும், மீனவர் அணி செயலாளராக என்.அருண் ஆனந்தும், விவசாய அணி செயலாளராக கந்த.சிவசுப்பு, தகவல் தொழில் நுட்பத்துறை அணிச் செயலாளராக எம்.விஜய் ஆனந்த், மகளிர் அணி செயலாளர் எஸ்.ராஜலட்சுமி, வழக்கறிஞர் அணிச் செயலாளராக எம்.செந்தில் ஆறுமுகம், வர்த்தகர் அணிச் செயலாளர் கே.ஜெயக்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

28ம் தேதி நெல்லையில் குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. குமரி மாவட்ட நிர்வாகிகள் பட்டியில் இரண்டொரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close