Advertisment

முக்கியத்துவம் பெறும் பரங்கிமலை ரயில் நிலையம்

சென்னையின் அடுத்த மிகப்பெரிய பொது போக்குவரத்து தலமாக பரங்கிமலை ரயில்நிலையம் உருவாகிக்கொண்டு இருக்கிறது.

author-image
Janani Nagarajan
New Update
முக்கியத்துவம் பெறும் பரங்கிமலை ரயில் நிலையம்

சென்னையின் அடுத்த மிகப்பெரிய பொது போக்குவரத்து தலமாக பரங்கிமலை ரயில்நிலையம் உருவாகிக்கொண்டு இருக்கிறது.

Advertisment

மெட்ரோ ரயில் கட்டம்-2 தாழ்வாரங்கள் தயாராகிய பின்பு சென்னையில் மிகப்பெரிய போக்குவரத்து மையமாக அமைய பரங்கிமலை ரயில் நிலையம் இருக்கிறது என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு மக்கள் போக்குவரத்திற்காக இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள், ஒரு எம்.ஆர்.டி.எஸ். பாதை மற்றும் புறநகர் வாகனங்கள் ஆகியவற்றிற்கு இடையே தன் பயணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

இவை மட்டுமல்லாமல், மக்களால் இவ்வசதிகளைக் கொண்டு நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் தொலைதூர புறநகர் பகுதிகளுக்கு பயணிக்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் 47 கிலோமீட்டர் இரண்டாம் கட்ட பாதை, மாதவரத்தில் இருந்து பரங்கிமலை வழியாக சோழிங்கநல்லூர் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் நிறுத்ததையும் கருத்தில் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. இவ்வசதி மூன்று ஆண்டுகளில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள முதல் தளத்தில் எம்.ஆர்.டி.எஸ். மற்றும் இரண்டாவது தளத்தில் இரட்டை அடுக்கு நடைபாதையை, CMRL மற்றும் ரயில்வே நிறுவனம் திட்டமிட்டு வருகின்றன.

மாதவரத்தில் இருந்து ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்பட்ட மெட்ரோ வழியானது, பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்தையொட்டி இருக்கும் மெட்ரோ நிலையத்தின் வழியில் சென்று, 27 மீட்டர் உயரத்தில் இடதுபுறம் திரும்பி ஆதம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் அடையும்.

பரங்கிமலை மற்றும் ஆதம்பாக்கம் இடையே MRTS (Mass Rapid Transit System) ஆல் கட்டப்பட்டு வரும் 460 மீட்டர் இரட்டை அடுக்குப் பாதை, புறநகர் ரயில் பாதைகளைக் கடக்கிறது. சீரமைப்பு ஒரே மாதிரியாக இருப்பதால் இரண்டு கோடுகளுக்கும் பொதுவான/மாற்று துவாரம் இருக்கும். இது நிலம் கையகப்படுத்துதல் மற்றும் செலவுகளைக் குறைக்கும்.

பரங்கிமலை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் OMR போன்ற புறநகர்ப் பகுதிகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, எம்ஆர்டிஎஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ள வேளச்சேரி மற்றும் கோட்டூர்புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, கட்டம்-2 இல் பாதை இணைக்கப்படும். பின்னர், திட்டமிடப்பட்ட தாம்பரம் - கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை வரும்போது, ​​​​எம்ஆர்டிஎஸ் பயணிகள் தாம்பரம், வண்டலூர் மற்றும் கிளாம்பாக்கம் போன்ற விமான நிலையத்திற்கு ஆகிய பகுதிகளை எளிதாக அணுகலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment