மாணவி வளர்மதி கல்லூரியில் இருந்து இடைநீக்கம்

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

சேலம் மாவட்டம் தாதனூரை சேர்ந்த வளர்மதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை மாணவியாக உள்ளார். கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜெயந்தி என்பவருடன் இணைந்து மாணவி வளர்மதி துண்டு பிரசுரம் விநியோகித்துள்ளார். அப்போது, இருவரையும் கைது செய்த காவல்துறை, நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயந்தியை விடுவித்தனர். ஆனால், வளர்மதி மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி வளர்மதி குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டதை யடுத்து, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close