பொதுமக்களின் கோரிக்கை காரணமாக மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத் துறை அறிவித்துள்ளது. அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் எப்போதும் போல அலுவலகங்கள் செயல்படும். அதேபோல் விடுமுறை நாட்களில் பதிவு செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பதிவுத்துறை சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்ச் மாதம் முழுவதும் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து இருக்கும்.
அதன்படி இன்று (மார்ச் 1), 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். மார்ச் மாதம் என்பதால் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது கணக்குகளை நிறைவு செய்ய வசதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மார்ச் மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை ஆவணங்கள் பதிவு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட உள்ளது.