அடுத்த ஸ்டிங் ஆபரேஷன்; பணம் வாங்கி சிக்கினார் 'கூடங்குளம்' சுப.உதயகுமார்?
சமீபத்தில் ‘டைம்ஸ் நவ்’ சேனலில், கூவத்தூரில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் பேரம் தொடர்பான வீடியோ வெளியாகி, இன்று தமிழகத்தில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ. சரவணன் பேரம் பேசுவது போன்று இந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சரவணன், “வீடியோவில் இருப்பது நான்தான்..ஆனால், குரல் என்னுடையது அல்ல” என்று கூறி அதனை மறுத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அர்னாப் கோஸ்வாமியின் ‘ரிபப்ளிக்’ டிவியில், ‘ஸ்டிங்’ ஆபரேஷன் எனும் பெயரில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைய கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, மக்களை திரட்டி போராடிய சுப.உதயகுமார் பேரம் பேசுவது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ இதோ..
WATCH Udayakumar on tape: ‘Direct foreign transfer a problem. You can pay in cash; ask family to pay through Indian banks’#ActivismForAPrice pic.twitter.com/OFbGe5mpGk
— Republic (@republic) 20 June 2017
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.