சிங்கப்பூர் நாட்டில் பணிபுரிந்து வந்த தமிழர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர் ஒருவரும் சாலையில் தடம் புரண்டு வந்த கார் மோதியதால் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்தவரின் பெயர் அப்துல் கதர் ரஹ்மான் கரீம் (33) என்பதும் , இந்திய வம்சாவளியை சேர்ந்தவரின் பெயர் முகமது ரபிக் முகமது பாரூக் (27) என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் சனிக்கிழமையன்று நடைபெற்றதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூகாங் அவென்யூ 3 வழியாக திரும்பி கார், கல்லாங்-பயா லெபார் அதிவேக நெடுஞ்சாலையை பிடிப்பதற்காக, ஏர்போர்ட் சாலையில் இருந்து திடீரென வலதுபுறம் திரும்பும் போது, இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
விபத்தில் படு காயமடைந்த இருவரும், சாங்கி பொது மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர் . இருப்பினும் மருத்துவ பலனின்றி இருவரும் உயிர் இழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
உயிர் இழந்த இருவரும், இந்திய உணவகத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடத்திற்கு வரும் வழியில் தான் இந்த கோர விபத்து நடைபெற்றது என்ற மற்றொரு செய்தி நமது கடைசி கட்ட கண்ணீரை விலை கேக்குறது.
வீட்டின் ஒட்டுமொத்த நம்பிகையும் கரீம் தான், கோட்டைபட்டினம் கிராமத்தில் அவனின் குடும்பம் என்ன பாடுபடும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்று உறவினர் கலந்தர் முகமது ரியாஸ் கூறினார் .
தனது மனைவி, இரண்டு வயது மகள் மற்றும் 60 வயதை கடந்த பெற்றோரை விடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். தற்போது, நண்பர்களும்,குடும்ப உறவினர்களும், ரஹ்மான் கரீமின் இறுதிச் சடங்கிற்காக நிதி திரட்டி வருகிறோம். அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும் முயற்சிக்கின்றனர் .
"அவர் மிகவும் ஏழ்மையானவர் என்பதால் நிதி திரட்டுவதற்கான வழிகளை தேடுகிறோம்" என்று கலந்தர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
நன்கொடை அளிக்க விரும்புவோர் கலந்தரை 8509 0786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.