சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய ரஜினி, "மக்களிடம் என்னை முறையாக சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. நானும் பெங்களூரில் ஊடகத்தில் சமிக்த கர்நாடக தின இதமிழல் பிழை திருத்துனராக பணியாற்றி உள்ளேன். ஊடகங்களை எவ்வாறு கையாளுவது என எனக்கு சமீப காலமாக தெரியவில்லை. இது வரை லோகோக்களை மட்டும் தான் பார்த்து உள்ளேன். இப்போது நிருபர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்குகின்றன. இங்கிருந்து அரசியல் புரட்சி உண்டாக வேண்டும் என்பது எனது ஆசை. 100 சதவிதம் உங்களுடன் நான் இருந்து கொண்டே இருக்க வேண்டும். முறையான செய்தியாளர் சந்திப்பின் போது உங்களுடய கேள்வியை கேட்கலாம். நான் தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். சுதந்திரப் போராட்டம் போல மற்றொரு புரட்சிக்கு தயாராக உள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, "கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்வின் போது, முறைப்படி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும். அப்போது நீங்கள் கேட்கவேண்டிய அனைத்துக் கேள்விகளையும் கேட்கலாம். நான் பதில் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களுடனான இந்த சந்திப்பு நட்பு ரீதியிலாக நடந்துள்ளது. மூத்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அரசியல் குறித்து ஒவ்வொருவரிடமும் ரஜினி ஆலோசனை கேட்டிருக்கிறார். அனைவரும், தங்களுக்கு தோன்றிய ஆலோசனைகளையும், கருத்துகளையும் ரஜினிக்கு தெரிவித்துள்ளனர். இதை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட ரஜினி, செய்தியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.