/indian-express-tamil/media/media_files/2025/10/13/ajai-rasthoki-2025-10-13-12-13-08.jpg)
கரூர் துயர சம்பவ வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள டெல்லி உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை மேற்பார்வையிட, அஜய் ரஸ்தோகி தலைமையில் எஸ்.ஐ.டி குழு அமைத்துள்ளது. இதனிடையே இந்த அஜய் ரஸ்தோகி யார் என்பது குறித்த கேள்வி அதிகமாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இதில் பகலில் நாமக்கலில் பிரச்சாரம் செய்த விஜய், மதியம் கிளம்பி கரூருக்கு சென்றிருந்தார், பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசி முடித்தவுடன் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பரபரப்பு உருவானது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் பெண்கள் உட்பட 41 பேர் பலியான நிலையில், 100-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசின் சார்பில், ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில், சி.பி.ஐ விசாணை தேவை என்று, த.வெ.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த விசாரணையை மேற்பார்வையிட, அஜய் ரஸ்தோகி தலைமையில் எஸ்.ஐ.டி குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த அஜய் ரஸ்தோகி யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள நிலையில், இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். கடந்த 2018 முதல் 2023-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2018-ம் ஆண்டு திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியபோது, தனது பதவிக்காலத்தில் 500-க்கு மேற்பட்ட அமர்வில் பங்கேற்று வழக்கு விசாரணை நடத்தியுள்ளார்.
மேலும் தனது பதவிக்காலத்தில், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும், திருமணத்திற்கு மீறிய உறவுகளை குற்றமற்ற தாக்குதல், கருணைக்கொலை உரிமைக்கு ஆதரவாகவும் தீர்ப்பு அளித்துள்ளார். அதேபோல், பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.