Advertisment

ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கு : நவ. 13-ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கை நவம்பர் 13-ம் தேதி அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
o.panneerselvam, supreme court of india, aiadmk, cm edappadi palaniswami, semmalai mla, speaker dhanapal

ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கை நவம்பர் 13-ம் தேதி அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக இங்கிய காலகட்டமான கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கோவை அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார். அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவை மீறியபோதும் இவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் சபாநாயகர் தனபால் பறித்தார். இந்த அடிப்படையில் ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கேட்டு திமுக கொறடா அர.சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் இதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வில் நிலுவையில் இருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக இந்த வழக்குகளில் கேள்வி எழுவதால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுதான் இதை விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியில் இடம் பெற்றவரான செம்மலை எம்.எல்.ஏ. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

அதன்படி வருகிற 13-ம் தேதி (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு பட்டியல் இடப்படுமா? அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கமான பெஞ்ச் விசாரிக்குமா? அல்லது, சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பது தெரியவரும்.

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டால், அந்த அமர்வு அடிக்கடி கூடி விசாரிப்பது சாத்தியம் ஆகாது. அதனால் இந்த வழக்கு நீண்ட காலம் நீளும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு சூழல் அமைந்தால், ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்களின் பதவிக்கும் இப்போதைக்கு ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

O Panneerselvam Supreme Court Of India Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment